உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கின்றதா? மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய செய்தி

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கின்றதா? மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய செய்தி

உங்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு செல்லும் முன் 011 7966366 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க இதை கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் அதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் 011 7966366 இந்த எண்ணை தொடர்பு கொண்ட பின் ஒரு சிறப்பு சுகாதார குழு வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் வருகைத்தந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலின் தன்மை வீரியம் அதிகமாக இருப்பதால், குறுகிய காலத்தில் வேகமாகப் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், சுகாதார ஆலோசனையை எப்போதும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.