இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

தமிழகம் தனுஸ்கோடியில் இருந்து கடல் மார்கமாக இலங்கைக்கு சட்டவிரோமாக கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகம் கியூ பிரிவு காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய படகு ஒன்றில் இருந்து நேற்று நள்ளிரவு குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சளின் பெறுமதி 65 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர்களை தேடி தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.