
வெளிநாடுகளுடனான உறவு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த கருத்து
வெளிநாடுகளுடனான உறவின் போது எமது நாட்டு நலன்களை கருத்திற் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகில் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்ததுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள்.
அதேபோல் எமது நாடும் எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம்.
எங்களைப் போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றன.
எமது மக்களினதும், நாட்டினதும் நலன்களை முன்னிறுத்தியே உதவிகளைப் பெற்றுக் கொள்வோம் என்றார்.