பச்சைப்பசும் கிளிநொச்சி மரம் நடுகைசெயற்றிட்டம் ஆரம்பம்

பச்சைப்பசும் கிளிநொச்சி மரம் நடுகைசெயற்றிட்டம் ஆரம்பம்

பச்சைபசும் கிளிநொச்சி எனும் தலைப்பில் மரம் நடுகைசெயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பரந்தன் முல்லைத்தீவுவீதியில் பூங்காவனச் சந்தியிலிருந்து பன்னங்கண்டி வரை முதற் கட்டடமாக ஒரு கிலோ மீற்றருக்கு வீதியின் இரு புறமும் சுமார் 400 தேக்குமரக் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத காடழிப்பு என்பவற்றால் சூழல் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்ற சூழலில் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சூழலை நேசிக்கின்றவர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தவகையில் முதற்கட்டமான பச்சைப்பசும் தரம் நடுகை செயற்றிட்டத்தை கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்செயற்றிட்டத்தின் தொடடர்ச்சிவரும் காலங்களில் தொடராக இடம்பெறும் எனவும், இது தனியே ஒருதரப்பினால் மட்டும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என்பதனால் நீர்ப்பாசனத்திணைக்களம், வனவளத்திணைக்களம், பிரதேசபை, பிரதேசசெயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, ஆகியதிணைக்களுடன் இணைந்து இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.