நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவிய நாள் (அக்.27- 1961)

நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவிய நாள் (அக்.27- 1961)

அமெரிக்காவின் நாசா, சட்டர்ன் 1 என்ற தனது முதல் விண்கலத்தை ஏவியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1806 - பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். * 1807 - பிரெஞ்சு- ஸ்பானியப் படைகள் போர்ச்சுக்கலை கைப்பற்றின. * 1810 - ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது. * 1867 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன. * 1870 - 140,000 பிரெஞ்சுப் படை

 

அமெரிக்காவின் நாசா, சட்டர்ன் 1 என்ற தனது முதல் விண்கலத்தை ஏவியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1806 - பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். * 1807 - பிரெஞ்சு- ஸ்பானியப் படைகள் போர்ச்சுக்கலை கைப்பற்றின. * 1810 - ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது. * 1867 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன. * 1870 - 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் ரஷ்யாவிடம் சரணடைந்தனர். * 1891 - ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

* 1904 - முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப்பெரியதும், உலகில் மிகப்பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும். * 1924 - உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது. * 1953 - தெற்கு ஆஸ்திரேலியாவில் ஈமியூ பீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. * 1958 - பாகிஸ்தான் முதலாவது ஜனாதிபதி இஸ்காண்டர் மிர்சா ராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.