மாஸ்கோ கலையரங்கி்ல் 800 பேரை பணயக் கைதிகளாக பிடித்த விவகாரம் முடிவுக்கு வந்த நாள் - 26-10-2002

மாஸ்கோ கலையரங்கி்ல் 800 பேரை பணயக் கைதிகளாக பிடித்த விவகாரம் முடிவுக்கு வந்த நாள் - 26-10-2002

மாஸ்கோ கலை அரங்கம் ஒன்றில் 3 நாட்களாக சுமார் 800 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து ரஷ்ய அரசை மிரட்டிவந்த 36 செசன்ய தீவிரவாதிகளை சிறப்புப் படையினர் 2002-ம் ஆண்டு இதே நாளில் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

 

மாஸ்கோ கலை அரங்கம் ஒன்றில் 3 நாட்களாக சுமார் 800 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து ரஷ்ய அரசை மிரட்டிவந்த 36 செசன்ய தீவிரவாதிகளை சிறப்புப் படையினர் 2002-ம் ஆண்டு இதே நாளில் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ கலை அரங்கத்திற்குள் நுழைந்த 50 செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் 800 பேரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். செசன்யாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரை உடனே திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து பணயக் கைதிகளையும் கொன்று விடுவோம் என மிரட்டி வந்தனர்.

 


அவர்களுடன் ரெட்கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் பேச்சு நடத்தி 8 குழந்தைகளை மீட்டனர். மேலும் சில நேயாளிகளையும் மீட்டு வந்தனர். ஆனால், படைகளை வாபஸ் பெறாவிட்டால் சனிக்கிழமை காலை முதல் அனைத்து பணயக் கைதிகளையும் சுட்டுக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் கூறியிருந்தனர். அவர்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்தனர். மேலும் பணயக் கைதிகள் பலர் மீதும் குண்டுகளைக் கட்டி வைத்தனர்.

தீவிரவாதிகளை பாதுகாப்புடன் வெளியேற அனுமதி தருவதாகவும் பணயக் கைதிகளை உடனே விட்டுவிடும்படியும் ரஷ்ய அதிகாரிகள் பேச்சு நடத்திப் பார்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. அந்த அரங்கத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறப்பு அதிரடிப்படையினர் தயார் நிலையில் இரவும் பகலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை (26-10-2002) அதிகாலை தீவிரவாதிகள் விதித்திருந்த கெடு முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கனவே மிரட்டியிருந்தபடி பணயக் கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்ல ஆரம்பித்தனர். இரு பணயக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்ட மறு வினாடியே ரஷ்ய அதிரடிப்படை வீரர்கள் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தனர்.

அந்தக்கட்டத்துக்குள் மயக்க வாயுவை செலுத்திய படையினர் ஒரு பக்க சுவரை குண்டு வைத்து தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று தீவிரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 32 தீவிரவாதிகள் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை சுட்டுக்கொண்டே பணயக் கைதிகளையும் பாதுகாப்பாக ரஷ்ய வீரர்கள் வெளியேற்றினர். இதனால் 750 பணயக் கைதிகள் உயிருடன் தப்பிவிட்டனர். ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் சுமார் 90 அப்பாவி பணயக் கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

40 நிமிடத்தில் அதிரடித் தாக்குதலை நடத்தி பணயக் கைதிகளை ரஷ்யப் படைகள் மீட்டது.