கொரோனா தொற்று குறித்து காலி மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வார இறுதி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த சந்தைகளை மறு அறிவித்தல் வரை மூடிவைக்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலாளர் திலேகா குடச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தங்கொட்டுவ மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியும் மூடப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ சுகாகாதார வைத்திய அதிகாரி மற்றும் வென்னப்புவ பிரதேச சபையினர் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
பேலியெகொடை மீன் சந்தையிலிருந்து, தங்கொட்டுவ பகுதிக்கு மீன் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.