போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் விரைவில்..!
பேரூந்து உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் உறுப்பினர்களுக்கிடையில் எதிர்வரும் நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காணப்படும் நிலையில் போக்குவரத்து நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.