
பேலியகொட மீன் சந்தையின் கொரோனா கொத்தணி நாடு முழுவதும் பரவும் அபாயம்! சுதத் சமரவீர தகவல்
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி மிகப் பெரியது எனவும் அது நாடு முழுவதும் பரவி செல்லக் கூடியது எனவும் எனினும் அது இதுவரை சமூகத்திற்குள் பரவவில்லை என்றும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகளவில் கண்டறியப்படுவது மிகப் பெரிய சவாலானது. அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி மிகப் பெரியது. எனினும், அது நாடு முழுவதும் பரவி செல்லக் கூடியது. தற்போதுவரை சமூகத்திற்குள் பரவவில்லை என்றார்.
இதேவேளை, நாடு முழுவதும் 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் மாத்திரம் 8 ஆயிரம் பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.