யாழில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

யாழில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், வீதியில் விழுந்த வேளை வீதியில் வந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி | Youth Killed In A Motorcycle Accident In Jaffna

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.