மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!ஒரே நாளில் 219 பேர் கைது..

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!ஒரே நாளில் 219 பேர் கைது..

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 98 பேர் ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்,44 பேர் கஞ்சா ரக போதைப்பொருள் வைத்திருந்தமைக்காகவும்இ ஐஸ் ரக போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமைக்காக 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.