இன்றைய ராசி பலன்கள் 23/10/2020
மேஷம்
மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணி ஆட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
கடகம்
கடகம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கன்னி
கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம்
துலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக் கறை காட்டுவார்கள். வாகனப் பழு தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்களை விட இன்று மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.சிறப்பான நாள்.