
இந்திய எல்லையில் இரத்தக்களரி மோதல் - தமிழர் உட்பட 20 பேர் பலி! தாக்குதல்கள் தொடர்பில் வெளியாகும் பகீர் தகவல்கள்
சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இந்திய அதிகாரிகள் முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர், ஆனால் இந்த வன்முறையில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எல்லைப் பகுதியில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தை சீனா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் தங்கள் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி மோதலைத் தூண்டுவதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.