
பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..
போலி மருத்துவர் போல தன்னை காட்டிக்கொண்டு பண மோசடி செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கேகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக கொஹூவல,அத்துருகிரிய மற்றும் மினுவாங்கொடை அகிய காவல் நிலையங்களில் புகார்கள் பதியப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.