யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி பகுதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுயேட்சைக் குழு வேட்பாளர் முருகேசு சந்திரகுமாரின் 270 தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை