உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட யாழ்.மாவட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை; பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்

உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட யாழ்.மாவட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை; பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை இன்று முதல் செயற்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இதற்கான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வைத்தியசாலை மருத்துவ குழுவினரிடம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று காலை மருதங்கேணி வைத்தியசாலை முன்பாக வழமைக்குமாறாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொரோனா தொற்று சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கொரோனா நோயாளியாக இவர் இன்று மாலை சேர்க்கப்படவுள்ளார்.