இத்தனை மணி நேரம் மனித தோலின் மேற்பரப்பில் உயிர் வாழுகிறதா கொரோனா? மற்றொரு ஆய்வுத் தகவல்

இத்தனை மணி நேரம் மனித தோலின் மேற்பரப்பில் உயிர் வாழுகிறதா கொரோனா? மற்றொரு ஆய்வுத் தகவல்

புதிய கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ முடியும், இது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் மனிதனின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் காலத்தைவிட ஐந்து மடங்கு காலம் அதிகம் என்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தொற்றுநோயியல் நிபுணர் ரியோஹெய் ஹிரோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் புதிய கொரோனா வைரஸ் மதுசாரம் அடிப்படையிலான கிருமிநாசினி அல்லது அதே செறிவின் எதனோல் திரவத்தால்; 15 விநாடிகளுக்குள் செயலிழக்கப்படுவதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து மக்கள் தங்கள் கைகளை மதுசாரம் கலந்த தொற்று நீக்கிகளை பயன்டுத்தி நன்கு கழுவ வேண்டும் அல்லது மதுசாரம்; சார்ந்த கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் ஹிரோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

குழுவின் இந்தக்கண்டுபிடிப்புகள் அமரிக்காவின் அறிவியல் இதழான 'மருத்துவ தொற்று நோய்கள்' என்ற இணையப்பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

குழுவின் கூற்றுப்படி, புதிய கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஏ ஆகியவை தோலின் மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டபோது, புதிய கொரோனா வைரஸ் மனித தோல் பரப்பின்

மீது சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்தது, அதே நேரத்தில் இன்புளுவன்சா ஏயின் உயிர்வாழ்தல் சுமார் 1.8 மணி நேரமாக இருந்தது.

இதேவேளை வெப்பத்தை தாங்கும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்ற உயிர்வாழ்வதற்கு உகந்த மேற்பரப்புகளுக்கு இந்த குழு வைரஸ்களைப் பயன்படுத்தியது.

இதன்போது புதிய கொரோனா வைரஸ் சுமார் 58 முதல் 85 மணி நேரம் வரை அவை செயலில் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா ஆறு முதல் 11 மணி நேரம் வரை மாத்திரமே அவற்றில் உயிர்;வாழ்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின்போது புதிய கொரோனா வைரஸ், எல்லா நிகழ்வுகளிலும் மிக நீண்ட காலம் தப்பிப்பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.