மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் திருகோணமலை ஊழியர்களின் உறவினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் திருகோணமலை ஊழியர்களின் உறவினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திருகோணமலையை சேர்ந்த ஊழியர்களின் உறவினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகள் இன்றையதினம் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை கம்பஹா - மினுவாங்கொட ஆடைத்தொழில்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பத்து உறவினர்களில் ஒன்பது உறவினர்களுக்கு திருகோணமலை - விஜயசேகரபுர பகுதியில் திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.