கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பலாங்கொடை மாணவனின் கண்டுபிடிப்பு

கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பலாங்கொடை மாணவனின் கண்டுபிடிப்பு

கொவிட் 19 வைரஸ் தொற்றை அடையாளம் காண்பதற்காக பல்வேறு வகையிலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது பெரும்பாலான இடங்களில் கொவிட்19 வைரஸ் தொற்றை இனங்காண்பதற்காக உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பாலும் ஒருவரின் வெப்பத்தை சோதனை இடுவதற்கு மற்றொரு நபர் உதவி புரிகிறார்.

ஆனால், பலாங்கொடை ஆனந்த மைத்திரிய தேசிய பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் சதேவ் என்ற மாணவர் ஒருவர், தமது விடுமுறை காலத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியுள்ளார்.

இவர் தனது விடுமுறை காலங்களில் தானியங்கி வெப்பமானி ஒன்றை உருவாக்கியுள்ளார்.