மன்னாரில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு

மன்னார்-ஒலுதுடுவாய் பிரசேத்தில் கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 200 கிலோ 825 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகை 94 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவந்து விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.