கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட 4000 மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை

கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட 4000 மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 4000 மீனவர்கள் எச்சரித்து திருப்பியனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் தாங்கள் இலங்கைப் படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பாக இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு கேட்டப்போது, அவர்களை சட்டவிரோதமான முறையில் இலங்கை எல்லையை கடக்க முயற்சித்த போது எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.