
நேற்றைய நாளிலே மாத்திரம் 9 ஆயிரத்திற்கும் அதிகமான PCR பரிசோதனைகள்
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நோயர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, குறித்த வைத்தியநாலையின் வைத்தியர்கள் 14 பேர் உள்ளடங்களாக 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர், உடனடியாக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக் மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பணியாளர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு வலையத்திற்கு உட்ப்பட்ட பகுதியில் நேற்றைய தினத்தில் 33 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தில் தொடர்ந்தும் பலருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா தொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்க்பட்டவர்கின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 475 ஆக காணப்படுகின்றது.
மேலும், 2 ஆயிரத்து 67 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், 255 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்க்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 513 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
நாட்டில் ஒரே நாளில் அதிகளவான PCR பரிசோதனைகள் நேற்றைய நாளிலேயே முன்னெடுக்கபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்றாளர்களை வேகமாக அடையாளம் காண்பதற்காக அதிக PCR பரிசோதனைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியிருந்தது.
இதன்படி, தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக அதிகளவான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் இதுவரை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 961 PCR பரிசோதனைகள் முன்னடுக்கபட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.