
கம்பஹாவில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை தயார்படுத்த தீர்மானம்!
கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை தயார்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திவுலப்பிட்டிய, ரதாவான மற்றம் தொம்பே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளை இதற்காக பயன்படுத்தவுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்காக, இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள 19 வைத்தியசாலைகளில்,மேலும் 49 நோயாளர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது
தொற்றாளர்களை அனுமதிப்பதற்காக, ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்து 75 அறைகளில், இரண்டாயிரத்து 26 அறைகள் தற்போது முழுமையாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.