பிரிட்டனில் அதிகரிக்கும் கொரோனா - 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 4 கோடியை நெருங்க உள்ளது.

 

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

 

 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் 11வது இடத்தில் உள்ளது. 

 

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

 

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 500- ஐ கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.