
இலங்கை தேயிலை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை தேயிலையை ரஷ்யா கொள்வனவு செய்வதால் அதன் விலை ஓரளவு அதிகரித்துள்ளதாக தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கொவிட் பரவல் நிலைமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் காரணமாக அந்த நாட்டின் தேயிலை உற்பத்தி 20 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இலங்கையின் தேயிலைக்கான கேள்வி அதிகரித்து அதன் விலையும் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சீனாவும் இலங்கையின் தேயிலையை அதிகளவு கொள்வனவு செய்வதாக தரகர்கள் தெரிவிக்கின்றனர்.