
விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! நாளையில் இருந்து அமுல்படுத்தப்படும் திட்டம்
சகல விமான பயணிகளும் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனைகளை செய்துக்கொள்வது கட்டாயம் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை நாளைய தினம் (18) மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் முதல் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளை ஆரம்பிக்க வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.