விசமிகளின் நாசகார செயல் - தெய்வாதீனமாக தப்பிய குடியிருப்பு வாசிகள்

விசமிகளின் நாசகார செயல் - தெய்வாதீனமாக தப்பிய குடியிருப்பு வாசிகள்

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை(16) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த தொடர்மாடி குடியிருப்பில் இனந்தெரியாத நபர்கள் சிலர் திடீரென உட்புகுந்து தீயினை வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் வீட்டுத்தொகுதியின் முன்னால் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் துவிச்சக்கர வண்டிகள் என்பன எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான இடத்தில் மின்சார மின்மானிகள் பகுதியளவில் சேதமடைந்த போதிலும் மின்கசிவு ஏற்படவில்லை.

இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.