உலக வறுமை ஒழிப்பு நாள் அக். 17, 1992

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக 1987-ம் ஆண்டு முதன்முதலாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக 1987-ம் ஆண்டு முதன்முதலாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

 

• 1610 - 13-ம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.

• 1933 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

• 1941 - இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

• 1966 - நியூயார்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

• 1979 - அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

• 1998 - நைஜீரியாவில் பெட்ரோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.

• 2006 - ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.