அமைச்சரவை சந்திப்பு- தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திகொள்ளுமாறு ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பு

அமைச்சரவை சந்திப்பு- தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திகொள்ளுமாறு ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற  ஊடகவியலாளர்  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஏனைய ஊடகவியலாளர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்களின் விபரங்களும்  கிடைக்கப்பெற்றுள்ளது. அவர்களுக்கு சுகாதாரத்துறை விரைவில் சுகாதார ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஊடகவியலாளர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பாக சோதனை முடிவுகள்  கிடைக்கும் வரை ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து  ஊடகவியலாளர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு  அத்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.