
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர்...!
இந்திய சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 63 ஆயிரத்து 371 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 70 ஆயிரத்து 468 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 895 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.