கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 2 நவீன கருவி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 2 நவீன கருவி

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சலுடன் மூச்சு திணறலும் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் மூலம் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். குறிப்பாக வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு வெண்டிலேட்டரின் உதவி அவசியம் தேவைப்படும்.


இந்தநிலையில் வெண்டிலேட்டரை விட அதிக சக்தி வாய்ந்த எச்.எப்.என்.ஓ. என்ற நவீன கருவி திருச்சி அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள இந்த கருவி அதிகப்படியான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு செலுத்தக்கூடியது. திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2 கருவிகள் இருந்தநிலையில் தற்போது கூடுதலாக மேலும் 2 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவி அதிகப்படியான ஆக்சிஜன் பாயும் திறன் கொண்டதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.