இரு பிள்ளைகளின் தாய் நகையகத்திற்குள் செய்த காரியம்...!

இரு பிள்ளைகளின் தாய் நகையகத்திற்குள் செய்த காரியம்...!

தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் பஞ்சாயுத வடிவத்தை கொண்ட தங்க ஆபரணம் ஒன்றை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாயுதன் ஒன்றை கொள்வனவு செய்ய வருகை தந்த இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணுக்கு நகையக ஊழியர்கள் பல ஆபரணங்களை காண்பித்துள்ளனர்.

இதன்போது அனைத்து பார்வையிட்ட குறித்த பெண் தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என தெரிவித்து நகையகத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது நகையக ஊழியர்கள் குறித்த பெண்ணுக்கு காண்பித்த பஞ்சாயுதங்களின் எண்ணிக்கை மீள் கணக்கிட்டுள்ளனர்.

இதன்போது ஒரு பஞ்சாயுதம் குறைவதாகவும் அதனை எடுத்தீர்களா எனவும் பெண்ணிடம் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பெண், தாம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினருக்கு அறிவிக்கப்போவதாக கூறியதையடுத்து அவர் தன்வசமிருந்த பஞ்சாயுதத்தை நகையக ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.

பஞ்சாயுதத்தை பெற்றுக்கொண்ட நகையக ஊழியர்கள் குறித்த பெண்ணை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து செல்ல அனுமதித்ததோடு காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்தே காவல் துறையினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.