அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!

அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!

பல் அடுக்குகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம்செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் இவ்வாறு பல் அடுக்குகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு வாகனத் தரிப்பிடங்களை அமைப்பதற்காக ஏற்கனவே சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பல் அடுக்குகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடங்களை அமைப்பதன் மூலம் வாகன நெரிசலை தவிர்க்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று தெரிவித்துள்ளார்.