மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்- முதலமைச்சர் விஜய் உறுதி
மாதந்தோறும் மகளிருக்கு வழங்கப்படும் ரூ,1000 உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படும் என தகவல் வெளியானது.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.
தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலின்போது விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர்," மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
அதனால், மே மாத மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்றார்.