'மெர்சல்' குழந்தை நட்சத்திரத்திற்கு 'பேட்ட' நடிகர் பாராட்டு!

'மெர்சல்' குழந்தை நட்சத்திரத்திற்கு 'பேட்ட' நடிகர் பாராட்டு!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’மெர்சல்’ என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி கேரக்டரில் நடித்த விஜய்யின் மகனாக அதாவது சிறுவயது விஜய்யாக அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார் என்பதும், அவரது காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக், ‘மெர்சல்’ குழந்தை நட்சத்திரமான அக்சத் தாஸை பாராட்டி தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘அக்‌ஷத்தை குழந்தையாக நடத்தக் கூடாது என அவன் எனக்கு உணர்த்தியுள்ளான் என்றும், இயக்குநரின் பார்வையில் சரியாக விஷயத்தை புரிந்து கொள்ளும் திறமையுள்ள அவனது குணநலன்கள் என்னை அவன் முன் சரணடைய வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து அஜித்தின் படத்ததிலும் அக்சத் தாஸ் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது