ஜெயம் ரவியுடன் இணையும் அட்லீ?

ஜெயம் ரவியுடன் இணையும் அட்லீ?

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அட்லீ தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.