முதல் எலிமினேஷனில் அதிக வாய்ப்புள்ள போட்டியாளர் இவரா? ஆர்மியெல்லாம் வேஸ்ட்டா?

முதல் எலிமினேஷனில் அதிக வாய்ப்புள்ள போட்டியாளர் இவரா? ஆர்மியெல்லாம் வேஸ்ட்டா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் படலம் இன்று தொடங்குகிறது. அதனை அடுத்து இன்றைய புரொமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் சனம் ஷெட்டியை 4 பேரும், ஷிவானியை 4 பேரும் நாமினேஷன் செய்துள்ளதால் இவர்கள் இருவரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவது உறுதியாகி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்திய ஷிவானிக்கு ஆர்மியும் முன்கூட்டியே தொடங்கப்பட்டன. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிரத்னம் படம் வசனம் போல அவர் அளந்து பேசுவதை பார்த்து அவரது ஆர்மியினர்களே புலம்ப ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் போட்டியாளர்கள் பலமுறை எடுத்து சொல்லியும் ஷிவானி இன்னும் தனது நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை. எனவே அவர் நாமினேஷன் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றுள்ளார்

இதனை அடுத்து சனம் ஷெட்டி முதல் நாளில் எழுந்து நடிப்பதை பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் கண்டுபிடித்துவிட்டனர். இதனை அடுத்து அவரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் ஆஜித்தும் இன்னும் மெளனகுருவாகவே உள்ளார் என்பதால் அவருக்கும் நாமினேஷனில் இடம் கிடைத்துள்ளது

இன்றைய நிகழ்ச்சியில் நாமினேசன் பட்டியலில் இருக்கும் நால்வர் யார் யார் என்பது தெரியும் என்றாலும் சனம்ஷெட்டி மற்றும் ஷிவானி இடம்பெறுவது உறுதி என்பதும் இருவரில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக்பாஸ் ஆதரவு ஷிவானிக்கு இருக்கும் என கருதப்படுவதால் சனம் ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.