தனிமைப்படுத்தல் மையமாக யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி - அவசரமாக வெளியேற்றப்படும் மாணவர்கள்

தனிமைப்படுத்தல் மையமாக யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி - அவசரமாக வெளியேற்றப்படும் மாணவர்கள்

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ள நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அவசரமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 375 மாணவர்கள் (71ஆண், 304 பெண்) எட்டு பேருந்துகளில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்துகளில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.