வாவ்.. இந்த வாரம் இவருதான் கேப்டனா.. அப்போ பிக்பாஸ் வீடு ரணகளம்தான்.. மிரட்டல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரமோவில் இந்த வார கேப்டன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை நேரில் சந்தித்து வழக்கம்.
அதன் படியே இந்த சீசனிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார். எல்லாம் என் மேல உள்ள பொறாமைதான்.. பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்! இன்று இரண்டாவது சனிக்கிழமையான நேற்று முதல் செஸஷன் நேற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாவது செஸஷன் ஒளிபரப்பாக உள்ளது. நேற்று அனிதா, சுரேஷ், சனம் ஷெட்டி போன்றவர்களை ரோஸ்ட் செய்தார் கமல். மூன்றாவது புரமோ இன்று பாலாஜி முருகதாஸை வச்சு செய்யவுள்ளார் என்பது நேற்று இரவே தெரிந்துவிட்டது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் தனது கையில் தலைவருக்கு எதிரான புகார் பெட்டியை கையில் வைத்துள்ளார். ஜனநாயக முறைப்படி தொடர்ந்து பேசும் கமல், இந்த வார கேப்டன்ஷிப்ப ஜனநாயக முறைப்படி நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று ஷிவானியின் பெயரை கூறுகிறார். ஆனால் அவருக்கு ஒரு ஹவுஸ்மேட் கூட கையை தூக்கி ஆதரவு தெரிவிக்கவில்லை. கைத்தூக்கும் ஹவுஸ்மேட்ஸ் அடுத்து சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயரை கூறுகிறார் கமல். அவருக்கு ரியோ, சோமு, சம்யுக்தா, பாலாஜி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, கேப்ரில்லா ஆகியோர் கையை தூக்கி ஆதரவை காட்டுகின்றனர். கமல் டபுள் மீனிங் அவர்களுக்கு வணக்கம் வைக்கிறார் சுரேஷ்.
அப்போது பேசும் கமல் ஓட்டு போடுறவங்களுக்கு ஒரு அறிவுரை, யோசிச்சு நல்ல முறையா போடுங்க.. போட்டுட்டு அப்புறம் வருத்தப்படுறதுல அர்த்தமே இல்ல.. என்ன.. டபுள் மீனிங்ல பேசுறாருய்யா மறுபடியும்னு நினைக்காதீங்க.. யோசிச்சு போடுங்க.. என அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். களைக்கட்டும் இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ்கள், யாருக்காக எதற்காக என்ன மீனிங்கில் சொல்கிறார் என்பதை அறிந்து கைகளை தட்டி நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் மொட்டை அங்கிள் கேப்டன் ஆனால் பிக்பாஸ் வீடு களைக்கட்டும் என கமெண்ட்டடித்து வருகின்றனர்.