
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் ஒரு பாடலுக்கு கோமாளி பட நடிகை குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் யூடியூப்பில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா, அவரது ஸ்டைலில் நடனம் ஆடி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.