வவுனியாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்! சாரதிகளுக்கு ஏற்பட்ட நிலை

வவுனியாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்! சாரதிகளுக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா மன்னார் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காலை 10 மணியளவில் இடம்பெற்றது எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி காமினி பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது திடீரென மறுபக்கம் திரும்ப முற்பட்ட போது மன்னார் வீதி வழியாக வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.