மின்னேரியாவின் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

மின்னேரியாவின் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

எதிர்வரும் (13) செவ்வாய்க்கிழமை மின்னேரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மின்னேரிய நீர் தாங்கி சுத்திகரிப்பு பணிகள் காணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை ஹிங்குராங்கொட, மின்னேரிய நகரம், மின்னேரிய ஹபரன வீதி கிரிந்தலே வரை, கல்ஓய பீதி, ஹிங்குராங்கொட நகரம், மாலகபுர கம்பலவெவ மற்றும் சிங்கஉதாகம பிரசேதங்களுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.