கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக பொலிஸில் சரணடைந்த நபர்

கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக பொலிஸில் சரணடைந்த நபர்

கட்டுகஸ்தொட பகுதியில் 24 வயதான கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கட்டுகஸ்தொட பொலிஸ் நிலையத்திற்கு வந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று விரைந்து சென்றுள்ளது.

இதன்போது படுக்கையில் கிடந்த கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து இருப்பதை கண்ட பொலிஸார் அவரை காப்பாற்றியுள்ளனர்.

மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான தகராறைத் தொடர்ந்து அவரது கணவர் குறித்த பெண்ணை கொல்ல முயற்சித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.