யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தென்னிலங்கையில் சடலமாக!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் மாதம்பை பொலிஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.