
கொழும்பிலும் கொரோனா அச்சுறுத்தல் - வெளியான அறிவிப்பு
கொழும்பு 07இல் உள்ள புனித பிரிகேட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரது பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அக் கல்லூரியினால் இன்று பகல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இராஜகிரிய – வெலிகடவத்த பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டமை இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த தகவலை கோட்டே பிரிவு பொது வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்