21 போட்டிகள் முடிவில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முக்கிய பங்கு வகிக்கும் ரன்ரேட்

ஐபிஎல் தொடரில் இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிகெட் லீக் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

 

இதுவரை 21 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, இரண்டு தோல்விகளுடனும், டெல்லி அணி ஐந்து போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடனும் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி (+1.488) முதல் இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (+1.060 ரன்ரேட்) 2-வது இடத்தை பிடித்துள்ளது.

 

நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (+0.002 ரன்ரேட்) 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (-1.355) 3 வெற்றிகள் பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.371) 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுட்ன் 5-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதாராபாத் (-0.417) 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (-0.826) 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மும்பை, டெல்லிக்கு அடுத்தப்படியாக அதிக ரன்ரேட் (+0.178) வைத்துள்ளது.

 

கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் ரன்ரேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.