
கொரோனா அச்சம்; கிழக்கில் காலவரையறையின்றி மூடப்பட்ட முக்கிய இடங்கள்!
நாட்டின் பல பாகங்களில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தொழில் நுட்பக்கல்லூரி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் அதிகளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் காத்தான்குடி அக்சா பள்ளிவாயலும் மறு அறித்தல் வரை பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதுடன், சமுக இடைவெளிகளையும் பேணி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.