தனிமைப்படுத்தல் மையத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை!

தனிமைப்படுத்தல் மையத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை!

யக்கலவிலிருந்து வெலிகந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 68 வயதான பெண் மாரடைப்பால் உயிரிழந்தார் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இராணுவ மருத்துவக் குழு விரைவாகச் செயற்பட்டதாகவும் குறித்த பெண் இருதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட நிலையிலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யக்கல பகுதியை்ச சேர்ந்த குறித்த பெண்வெலிகந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.