
கம்பஹா மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மற்றுமொரு செய்தி
கம்பஹா மாவட்டத்தில், online முறைமையில் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அருகிலுள்ள மருந்தகங்கள் தொடர்பான தகவல்களை health.gov.lk என்ற இணைத்தளம் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேலதிக உதவிகளைப் பெற்றுக் கொள்ள 072 07 20 720 அல்லது 0720 60 60 60 என்ற இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.