பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கை

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கை

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தரவு மற்றும் அவர்களின் சுய தகவல்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமை பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை என்பன அதி கூடிய பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ் விடயத்தில் பாடசாலை அதிபர்கள் முதல் தரப்பினராக இணைத்து கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிடப்பட்ட வகையில் பரீட்சையை நடத்த இறுதி தீர்மானம் எடுத்தமை முதல் வெற்றியாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.